பிரதான செய்திகள்

தேர்தலுக்கான பெயரை மாற்றும் கட்சி

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் பெயரை “தமிழர் ஐக்கிய முன்னணி” என பெயர் மாற்றம் செய்வதற்கான ஆட்சேபனைகளை தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.


குறித்த கோரிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பெயர் மாற்றம் தொடர்பான ஆட்சேபனைகளை பெறுவதற்காக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளிடம் எழுத்து மூலமாக சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய பெயர்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது தொடர்பில் ஆட்சேபனைகள் உள்ளதா எனவும், தேர்தல் ஆணைக்குழு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளிடம் வினவியுள்ளது.

அவ்வாறு ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் உறுதிப்படுத்துவதற்கான விடயங்களுடன் எதிர்வரும் 05.02.2020இற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி ஒன்று எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ள நிலையில், எந்த சின்னத்தில் போட்டியிடவுள்ளனர் என்ற பரபரப்பு காணப்படும் நிலையில், இந்த பெயரினை மாற்றும் கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் குறித்த புதிய கூட்டணி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியென பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே குறித்த பெயர் மாற்ற செயற்பாடுகள் விரைவாக இடம்பெற்றிருக்கலாம் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related posts

தன் துணையுடன் உடலுறவு கொள்வது யார்? உங்கள் கைபேசி சொல்லும்!

wpengine

கிழக்கின் எழுச்சிக்கு ஊடகவியலாளர்கள் மிகப்பெரும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

wpengine

ரஞ்சனை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றும் அரசாங்கத்தின் சூழ்ச்சி

wpengine