பிரதான செய்திகள்

தேர்தலுக்கான திகதி 8ஆம் திகதி அறிவிக்கப்படும்.

2020ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதியை தீர்மானிப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 8ம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.


சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டி அறிவுறுத்தல் குறித்து மாவட்ட உதவி தெரிவு அத்தாட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேர்தலை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என்றார்.


வரலாற்றில் முதல் முறையாக இம்முறை தேர்தல் நடைபெறும் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார பணியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுளளனர் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.


வேட்பாளர்களுக்கான விருப்ப எண் வழங்குவது குறித்தும் அன்றைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related posts

மின் தடையா? அவசர அழைப்பு புதிய இலக்கம் 1987

wpengine

தமிழ் இனத்தை இனிமேல் ஒன்றிணைக்கப் போவது அரசியல் அல்ல மொழிதான்-விக்கினேஸ்வரன்

wpengine

முழு தோல்வியடைந்த மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை!

wpengine