பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல்! 14 இளைஞர் யுவதிகள் வேட்புமனுத்தாக்கல்

மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


மன்னார் மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிற்கும் உட்பட்ட 18 வயது முதல் 29 வயதிற்குட்பட்ட இளைஞர், யுவதிகள் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


மன்னார் மாவட்டச் செயலகத்தில் உதவி அரசாங்க அதிபர் சிவராஜா தலைமையில் ஆரம்பமான குறித்த வேட்புமனுத் தாக்கலில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர்,மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் யு.எல்.ஏ.மஜித்,மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி என்.பூலோகராஜா, தேசிய சமமேளன பிரதி நிதி ஜசோதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


தற்போது வரை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 14 இளைஞர் யுவதிகள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.


எதிர்வரும் 22ம் திகதி அனைத்துப் பிரதேச செயலகங்களிலும், காலை முதல் மாலை 4 மணிவரை வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டு, முதன் முதலாக ஒன்லைன் மூலம் இந்த வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணில் அரசில் முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடம் கிடைக்குமா?

wpengine

சுயநல அரசியல் கபட நாடகத்திற்காக ரிசாட் பதியுதீனை போடுகாயாக பயன்படுத்தி வருகின்றனர்.

wpengine

இரு சட்டமூலங்களும் 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

wpengine