பிரதான செய்திகள்

‘தேரர்கள் போன்று வேடமிட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம்’

இஸ்லாமிய அடிப்படைவாதிகளால், பௌத்த துறவிகளை போல் வேடமிட்டும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் வைத்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர், இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை, ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பல விடயங்களை குறிப்பிட்டோம்.

அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக, முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஆட்சியில் இருந்த அரச தலைவர்களும் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அமைச்ச ரிஷாட்டின் பெயரைப்பயன்படுத்தி கண்டி ஊர்வலத்திற்கு ஆட்சேர்க்க நடவடிக்கை.

wpengine

“கசகசா” மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? இஸ்லாமிய பார்வை

wpengine

உதா கம்மான (கிராம எழுச்சி) வெலிஓயாவில் ஆரம்பித்து வைத்த சஜித்

wpengine