பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மன்னாரில் வீட்டுத்திட்டம்

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாதிரி கிராம திட்டத்திற்கமைவாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட மூன்று கிராமங்களில் புதிய வீட்டுத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை 09-02-2019 காலை இடம்பெற்றது.
எனினும் அழைக்கப்பட்ட அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிய வருகின்றது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் தலைமையில் குறித்த வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வகள் இடம் பெற்றது.

இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வசந்தபுரம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 24 வீடுகள், பட்டித் தோட்டம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 26 வீடுகள் மற்றும் மன்னார் சின்னக்கடை பகுதியில் அமைக்கப்படவுள்ள 18 வீடுகளுக்கு ஆரம்ப கட்டமாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வுகளில் மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு,கிராம அலுவலர்களுக்கான நிர்வாக உத்தியோகஸ்தர் எஸ்.ஏ.ராதா பெணான்டோ, மன்னார் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 68 வீடுகள் அமைக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவில் நாடளாவிய ரீதியில் 2500 மாதிரிக் கிராமம் அமைக்கப்படவுள்ள நிலையில் குறித்த வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இவ்வாறு இடம் பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வுகளுக்கு வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வதேச குற்றவியல் பொறிமுறையைக் கோருகின்ற கையெழுத்துப் போராட்டம்

wpengine

கெக்கிராவை- கனேவல்பொல நசீராவின் விட்டில் விசித்திரமான கோழி

wpengine

ஞானசார தேரரை கைதுசெய்யாமை! பிரச்சினை

wpengine