செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்விளையாட்டு

தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.

இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 14 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில், தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.

இப்போட்டி நேற்று (07.02.2025) கொழும்பு றேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

மகாஜனக் கல்லூரியை எதிர்த்து குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரி மோதியது.

ஆட்டநேர நிறைவில் 1:1 என சமநிலையானது. இந்நிலையில், வெற்றி – தோல்வியை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் மகாஜனக் கல்லூரி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.

Related posts

அரசியல்வாதிகளுக்குள் பிரச்சினை! வடமாகணத்திலிருந்து பணம் திரும்புகின்றது- ஆளுநர்

wpengine

இழப்பு கத்தோலிக்க சமூகத்திற்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பு

wpengine

கொரிய நிறுவனத் தலைவர், அமைச்சர் ரிஷாட்டுடன் சந்திப்பு

wpengine