பிரதான செய்திகள்

தேசிய பட்டியல் அட்டாளைச்சேனையினை ஏமாற்றும் ஹக்கீம்! பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

அம்பாறை – அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதியை தராமல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்வது அட்டாளைச்சேனை பிரதேச மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் செயலாகவே உள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதனை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன்போது, முன்னாள் அமைச்சர் உரையாற்றும் போது,
பொறுமையை கடைப்பிடியுங்கள். தலைவர் எமக்கு தருவதாகச் சொன்ன தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் எமக்குக் கிடைக்கும்.

அதற்கான காலம் கனிந்துவிட்டது. ஆதரவாளர்களாகிய நீங்கள் இச் சந்தர்ப்பத்தில்தான் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும்.

இப்பொறுமைக்குப் பின்னால்தான் எமக்கு வெற்றி கிடைக்கும் என கூறியுள்ளார்.

Related posts

மாகாண மட்டத்தில் முதலிடம்! உதைப்பந்தாட்ட வீராங்கனை கௌரவித்த ஹிஸ்புல்லாஹ்

wpengine

லசந்த விக்ரமதுங்க கொலை விசாரணை தொடர்பாக ஆராய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு.

Maash

முல்லைத்தீவில் சமூக வலைத்தள பாவனை எப்படி விழிப்புணர்வு

wpengine