பிரதான செய்திகள்

தேசிய கீதத்தை மாற்றியது குறித்து விசாரணை!

ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ஆரம்ப விழாவில் தேசிய கீதம் மாற்றப்பட்டமை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.

தேசிய கீதத்தை விருப்பப்படி மாற்றுவது அரசியலமைப்புக்கு எதிரான செயல் என்றும் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இதனை அனுமதிக்க முடியாது  என்பதால், குறித்த நிகழ்வு தொடர்பில் விரைவான விசாரணையொன்று இடம்பெறவுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே. டி. என். ரஞ்சித் அசோக தெரிவித்தார்.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் மாற்றப்பட்டு பாடப்பட்டமை வருத்தமளிப்பதாக செயலாளர் வலியுறுத்துகிறார்.

Related posts

காணி விடயத்தில் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு அநீதி அமைச்சர் றிஷாட் ஆராய்வு

wpengine

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஹாஜியார் உணவக மகன்

wpengine

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த நோர்வே நாட்டின் தூதுவர்!

wpengine