செய்திகள்பிரதான செய்திகள்

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்.

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மீதான செலவு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இன்று (06) பாராளுமன்றத்தில் இதனை குறிப்பிட்டார். கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெறாது காணப்பட்ட ஜனாதிபதி ஊடக விருது விழா இவ்வருடத்தில் மீண்டும் நடாத்தப்படுவதாக அமைச்சர் இதன்போது அறிவித்தார்

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;

அரசாங்க தகவல் திணைக்களம், லேக் ஹவுஸ், ரூபவாஹினி, தேசிய வானொலி மற்றும் அரசாங்க அச்சகம் ஆகியவற்றிற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 5.2 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஊடகவியலாளர்களுக்கான பட்டய நிறுவனம் (Chartered Institute) ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்காக வருடாந்த 100 புலமை பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. அரசாங்க அச்சகத்தில் புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூபவாஹினியை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டம் நீண்ட காலமாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் திட்டமாகும். ஜப்பான் நாட்டின் கடன் உதவியின் கீழ் 11, 12 வருடங்களாக இத்திட்டத்தை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டது. டிஜிட்டல் அமைச்சு மற்றும் ஊடக அமைச்சு ஆகியன இணைந்து இத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தவுள்ளது.

அரசியல் மயப்படுத்தப்பட்டுக் காணப்பட்ட அரச ஊடக நிறுவனங்களை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மன்றக் கல்லூரியின் இயல்பான நோக்கத்துடனான தன்மை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இக்கல்லூரியை நாட்டின் அடிப்படையைத் தயாரிக்கும் இடமாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் விபரித்தார்.

Related posts

அதிக விலையில் உரம் விற்பனை முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

wpengine

05 முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் – வர்த்தமானி அறிவிப்பும் வெளியானது!

Editor

21 ஆவது திருத்தச் சட்டம்! பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எம்.பி. பதவியை இழக்கக்கூடும்

wpengine