பிரதான செய்திகள்

துஸ்பிரயோகம் செய்த வவுனியா அதிபர் தலைமறைவு

வவுனியா வடக்கு வலயத்தில் அதிபராக கடமையாற்றும் ஒருவர் மாணவியை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் வைத்து குறித்த மாணவியை துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்ட நிலையில் மாணவியின் பெற்றோரால் நையப்புடைக்கப்பட்டார்.

எனினும் அந்த அதிபர் தொடர்பில் இதுவரை கல்வித் திணைக்களமோ, பொலிஸாரோ, சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அதிபர் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரையே அழைத்து வந்து துஸ்பிரயோகம் செய்ததாகவும், இது தொடர்பில் மாணவியின் பெற்றோர் அதிபருடன் முரண்பட்ட போதும், மாணவியின் எதிர்காலம் குறித்து இதுவரை முறைப்பாடு எதுவும் செய்யவில்லை என தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் அதிபரின் வீட்டிற்கு அண்மித்ததாக வசிக்கும் பலருக்கும் தெரிந்திருந்த போதிலும் அது தொடர்பில் எந்த முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் ஊடகங்களில் இச் செய்தி வெளியானதையடுத்து குறித்த அதிபர் தலைமறைவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். கொலை செய்து கடலில் போட்டனர்.

wpengine

பஷீர் பாடும் பாட்டு கேட்கிறதா?

wpengine

பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை அரசாங்கம் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்

wpengine