பிரதான செய்திகள்

துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்த வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் (படம்)

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தேவையுடைய பயனாளிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று 04-05-2017 வியாழன் மாலை 2 மணியளவில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் நடைபெற்றது.

அந்த வகையில் மன்னார் பனங்கட்டிக்கொட்டைச் சேர்ந்த நாளாந்தம் கூலி வேலை செய்துவரும் நபர் அவருடைய பாடசாலை செல்லும் பிள்ளைகளது தேவைக்காக துவிச்சக்கரவண்டி கோரியிருந்தார், அதேபோல வண்ணாகுளம் பகுதியை சேர்ந்த கடந்த யுத்தத்தில் தனது கணவனை இழந்த இரண்டு பிள்ளைகளது தாயார் தனது பிள்ளைகளது தேவைக்காக்கவுமென ஒரு துவிச்சக்கரவண்டியை கோரியிருந்தார்.

இவ்விருவரது தேவைகளையும் ஆராய்ந்து அவர்களது பிள்ளைகளது கல்விக்காக தனது நிதியில் இருந்து இரண்டு துவிச்சக்கரவண்டிகளை அமைச்சர் வழங்கிவைத்தார். 

Related posts

மன்னார் மாவட்ட புதிய மறை மாவட்ட ஆயர் நியமனம்

wpengine

உதய கம்மன்பிலவுக்கு ஆதரவாக வாக்களிக்க மஹிந்தவை சந்தித்த முஸ்லிம் சோனிகள்

wpengine

வவுனியாவில் உயர்தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய மைத்திரியின் மாநாடு

wpengine