பிரதான செய்திகள்

துமிந்தவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்த பந்துல

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹோமாகம தொகுதி அமைப்பாளர் பொறுப்புக்களிலிருந்து தாம்மை நீக்கியமை குறித்து பந்துல குணவர்தன முறைப்பாடு செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம தொகுதியின் அமைப்பாளராக பந்துல குணவர்தன கடமையாற்றி வருகின்றார். எனினும் இந்தப் பொறுப்புகளிலிருந்து தம்மை கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நீக்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

நீண்டகாலமாக ஹோமாக தொகுதி அமைப்பாளராக கடமையாற்றியுள்ளதாகவும் கட்சியின் மத்திய மற்றும் நிறைவேற்றுக் குழுக்களில் தொடர்ச்சியாக அங்கம் வகித்து கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் நிலையில் மாகாணசபை உறுப்பினா் காமினி திலகசிறிக்கு ஹோமாகம தொகுதியின் சில பொறுப்புக்களை வழங்கியமை தம்மை உதாசீனம் செய்வதற்கு நிகரானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு குறித்து கவனம் செலுத்தி கட்சியின் பொதுச் செயலாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பந்துல குணவர்தன, ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.

Related posts

கட்சியின் காணிகளை கொள்ளை அடித்த ஹாபீஸ் நசீர்! விசாரனை ஆரம்பம்

wpengine

அக்கரைப்பற்றில் புறக்கணிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள்.

wpengine

தீயாக பரவி வரும் ஐஸ்கிரீம் மெஜிக் (விடியோ)

wpengine