செய்திகள்பிரதான செய்திகள்

துப்பாக்கி சூடு நடத்த முட்பட்டபோது துப்பாக்கி செயலிழந்ததால் மாட்டிக்கொண்ட துப்பாக்கிதாரி (வீடியோ )

கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடு ஒன்றிற்குள் நுழைந்து T-56 துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது, துப்பாக்கி செயலிழந்ததால் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மற்றவர் வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர் தடுப்புச் சுவரில் ஏறி தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்து இரு கால்களும் முறிந்து படுகாயமடைந்துள்ளார்.

அந்த நேரத்தில், அவர் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும், இதனால் பிரதேசவாசிகள் அங்கு கூடியதாகவும் பொலிஸார் ​தெரிவித்தனர்.

அதன் பின் பிரதேசவாசிகளால் குறித்த நபர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

தற்போது துப்பாக்கிதாரி நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடியோவை பார்வையிட : https://www.facebook.com/vanninews.lkOfficial/videos/1013274227425444

Related posts

அவதணம் ! வடக்கில் ஆசை வார்த்தைகளை கூறி ஆள்கடத்தல்கள் அதிகரிப்பு .

Maash

யாழ் ஆயரை சந்தித்தார் மைத்திரபால சிறிசேன!

Editor

தாய்நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் உறுதி பூணுவோம்! ஐ.தே.க. பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர்

wpengine