உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

துப்பாக்கி சுட்டில் காதை பரிகொடுத்த பெல்ஜியம் பிரதமர் (வீடியோ)

விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பித்து வைப்பதற்காக பெல்ஜியம் இளவரசி, சுடும் போது ஏற்பட்ட துப்பாக்கியின் சத்தத்தால் அருகில் நின்ற அந்நாட்டு பிரதமர் கேட்கும் திறனை இழந்துள்ளார்.

 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்துள்ளதாவது, பெல்ஜிய தலைநகர் புருசெல்சில் கடந்த வரம் இடம்பெற்ற மரதன் ஒட்டப்பந்தயத்தை  அந்நாட்டு மன்னர் பிலிப்பின் இளைய சகோதரி ஆஸ்ட்ரிட் மற்றும் பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் போட்டியை ஆரம்பிப்பதற்காக இளவரசி வெடித்த துப்பாக்கியின் சத்தத்தால் பிரதமரின் கேட்கும் திறன் இல்லாது போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

 

இருப்பினும் பிரதமர் மைக்கேல் கடந்த சில நாட்களாக தனது இயல்பான பணிகளை மேற்கொண்டு வந்தாலும், அவருக்கு காது கேளாது போனமை நேற்றுதான் ஊடகங்களுக்கு கசிந்துள்ளது. ஆனால் கடந்த வாரம் பெல்ஜியம் வந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதோடு, நேட்டோ படை தொடர்பாக கூட்டறிக்கை ஒன்றையும் மைக்கேல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு பிரதமரின் செவிப்புலன் பிரச்சினைக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர் இயல்பான நிலைக்கு திரும்புவார் என பெல்ஜிய அரச தொடர்பு பேச்சாளர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர்கள் நியமனம்! சஜித் எதிர்ப்பு! போசாக்கு திட்டம் முடிவுக்கு கொண்டுவரவுள்ள ரணில் அரசு

wpengine

அனைத்து அரச பாடசாலைகளம் 5 நாட்கள் விடுமுறை

wpengine

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரங்கள் பிரதமரின் கீழ்

wpengine