பிரதான செய்திகள்

தீவிரவாத இயக்கங்கள் உருவாவதற்கு நாமும் ஒர் வகையில் காரணம்

கிறிஸ்தவர்களினால் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஆபத்து கிடையாது என்பதனை உறுதிபடக் கூற முடியும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மதத்தின் பெயரால் தாக்குதல் நடத்தி வன்முறைகளில் ஈடுபடும் நபர்கள் எந்தவொரு மதத்தையும் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது என அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் கர்தினலை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு மதத்தையும் பின்பற்றும் நபர்களினால் இவ்வாறான கொடூரத் தாக்குதல்களை முன்னெடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்தவர்ளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் வலுவானது எனவும் நீண்ட காலமாக இந்த பிணைப்பு காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் இஸ்லாமிய முறைப்படி தாக்குதல் நடத்தியதாக கூறினாலும் இந்த எதுவும் இஸ்லாமிய மார்க்கத்தின் வழியானது அல்ல என தெரிவித்துள்ளார்.

எம்மீது தாக்குதல் நடத்திய தரப்பினருக்காகவும் நாம் பிராhத்தனை செய்கின்றோம் எனவும், இஸ்லாமிய மக்கள் மீது நாம் கைதூக்கிவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தீவிரவாத இயக்கங்கள் உருவாவதற்கு நாமும் ஒர் வகையில் காரணம் எனவும், சமூகத்தில் காணப்படும் பல்வேறு ஏற்றத்தாழ்வு நிலைமைகளே இந்த தீவிரவாதத்தை தூண்டுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஏன் நீக்கப்பட்டார்? ஜனாதிபதி தலையீடு மீண்டும் நியமனம்

wpengine

தமிழர் போராட்டத்தை காட்டிக்கொடுத்த கருணா அம்மான் சுமத்தும் குற்றச்சாட்டு

wpengine

மாட்டிறைச்சி விவகாரம்! முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்

wpengine