உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தீய விரோதிகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க தேவையான எதையும் செய்வேன்: டிரம்ப் சூளுரை

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த சனிக்கிழமை பயங்கரவாதிகள் வேனை மோதியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் வலைத்தளம் மூலம் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரியப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வாஷிங்டன் நகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டொனால்டு டிரம்ப் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் “லண்டனில் நடைபெற்ற தீயபடுகொலையில் சிக்கி உயிர் இழந்த குடும்பத்தினரோடும், படுகாயம் அடைந்தவர்களோடும் அமெரிக்க மக்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இருக்கின்றன. அப்பாவி உயிர்கள் மீது போர் தொடுக்கும் தீய விரோதிகளிடம் இருந்து நமது நாட்டையும் நமது நட்பு நாடுகளையும் பாதுகாக்க நாம் நம்முடைய தீர்மானங்களை புதுப்பிக்கவேண்டும். அவை முந்தையவைகளை விட பலமானதாக இருக்க வேண்டும்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், நமது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க தேவையான எதையும் செய்வேன். அதற்காக ஒவ்வொரு நாளும் உழைப்பேன்” என சூளுரைத்தார்.

Related posts

தாக்குதல்களை ராஜபக்சக்கள் மேற்கொண்டார்களா என்ற சந்தேகம்

wpengine

விடுமுறையின் பின் பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம்!

Editor

பாகிஸ்தானில் உள்ள அத்தனை பேரும் உத்தமர் தானா?: நவாஸ் ஷெரிப் கேள்வி

wpengine