பிரதான செய்திகள்

தில்லையடி அல் – முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் 2 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!

புத்தளம், தில்லையடி அல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் 2 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரியின் ஸ்தாபகர் மௌலவி முபாரக் ரஷாதி அவர்களின் தலைமையில் தாருல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரி வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் கலந்துகொண்டதோடு, சர்வ மதத்தலைவர்களான பொகந்தலாவ ராகுல தேரர், அகில சிவஸ்ரீ பாலநாத் குருக்கள் அவர்களும் புத்தளம் மெதடிஸ் தேவாலயத்தின் யோகான் ஜெயராஜ் அவர்களும் அனுசாசன உரையை வழங்கினார்கள்.

ஏராளமான பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் 41 மாணவர்கள் மௌலவிப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த 20 மாணவர்களுக்கு ஹாபிழ் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விசேடமாக மலேசியாவைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலரும், இவ்விழாவில் அதிதிகளாகக் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

2000.06.15இல், மௌலவி எஸ்.எச்.எம்.ஏ முபாரக் ரஷாதியின் முழு முயற்சியிலும், மௌலவி ஏ.ஆர்.பரீதின் ஒத்துழைப்பிலும் ஆரம்பமான இக்கல்லூரியானது முழுநேர ஷரிஆ கல்லூரியாகவும் ஹிப்ழு பிரிவையும் உள்ளடக்கியதாகவும் இயங்கி வருவதோடு ஷரிஆ பாடத்திட்டத்தையும் உள்வாங்கி  சிறப்பாக இயங்கி வருகின்றது.

பல மாணவர்களும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்கலைக்கழக கல்வியை மேற்கொண்டு உயர்கல்வியிலும் பிரகாசிக்க தொடங்கியுள்ளார்கள்.

எதிர்காலத்தில் இன்னும் பல முன்னேற்றகரமான திட்டங்களையும் இக்கல்லூரி முன்னெடுக்கவிருப்பதாக இவ்விழாவின் போது அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க டொலரின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.

wpengine

நிவாரண உதவித் திட்டம் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

Editor

விக்னேஸ்வரனுக்கு காய்வெட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு! கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கவில்லை

wpengine