பிரதான செய்திகள்

திலீபனின் நினைவேந்தல் மன்னாரில்

தியாகி திலீபன் சாவடைந்து 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அந்த ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அனுவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. நிகழ்வில் நினைவுப் பேருரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் மாட்டீன் டயேஸ், மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், நானாட்டான் பிரதேச சபையின் உப தலைவர் எம்.றீகன்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க், காணாமல் போனவர்களின் உறவினர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

குழந்தை படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்தால் சிறைத் தண்டனை – பிரான்ஸ்

wpengine

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இன்றி எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் வெற்றி பெற முடியாது

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்:

wpengine