பிரதான செய்திகள்

திருகோணமலை இந்து கல்லூரியின் அபாயா விவகாரம் வட மாகாண சபையில் நியாஸ் சீற்றம்

வட மாகாண சபையில் 10/05/2018 இன்று கௌரவ மாகாண சபை உறுப்பினர் S.M.A.நியாஸ் அவர்கள் ஆற்றிய உரை

கெளரவ அவை தலைவர் அவர்களே

திருகோணமலை ஸ்ரீ சண்முக பெண்கள் கல்லூரி முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வை பெற்றுக்கொள்வதோடு இவ்வாறான பிரச்சினைகள் சமுக நல்லினகத்தையும் இன ஒற்றுமையைச் சீர்குலப்பதினின்றும்பாதுக்காக்கும் நோக்கோடு சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

பிரச்சினையானது மிகவும் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பாடசாலையில் கடமையாற்றிவந்த ஆசிரியைகள் அப்பாடசாலைக்கு நியமனம் பெற்று வந்த போது சாரி அணிந்து வந்துள்ளார்கள் அப்போது தலையை மறைத்து ஹிஜாப் அணிந்துள்ளனர் .சிறிது காலத்தின் பின்னர் அவர்களிள் சாரி அணிவதற்கு பதிலாக “அபாயா” எனும் நீண்ட ஆடை அணிந்து பாடசாலைக்கு சமுகமளிதுள்ளார்கள். எனவே இங்கு தோற்றம் பெற்ற பிரச்சினை சாரியிலிருந்து அபாயாவுக்கு மாறி சாரி அணிவதை இடை நிறுத்தியதுடன் பாடசாலை நிர்வாகமும் அதற்குமேல் உள்ள அதிகாரமிக்க பாடசாலையை கட்டுபடுத்தும் நிர்வாகமும் சாரி அணியாமல் இருந்ததை இது இந்துகல்லூரியின் பெரும்பான்மை இந்து கலாச்சாரத்துக்கு மாறுபட்டது எனத் தெரிவித்து ஆட்சேபித்துள்ளனர் . இதனால் ஏற்பட்ட குழப்ப நிலையை தொடர்ந்து இப்பிரச்சினை இந்து முஸ்லிம் கலாச்சார சக இனப்பிரசினையாக பார்க்கப்பட்டு சமுக வலைத்தளங்களினூடாக வாத பிரதி வாதங்கலுக்குட்படுத்தபட்டு இன்று அதிருப்திமிக்க இனரீதியான கசப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் ஆசிரியைகள் சாரி அணியாது பாடசாலைக்கு அபாயா உடையில் வருவதற்கு ஆட்சேபனை தெரிவித்து கணிசமான மக்கள் தொகையை கொண்ட ஒரு கூட்டம் எதிர்ப்பு ஆர்பாட்ட மொன்றிலும் ஈடுபட்டது இதனை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இது சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது “முஸ்லிம் ஆசிரியைகள் சாரி அணிந்து கடமைக்கு செல்வதே அப்பிரச்சினைக்கு தீர்வாகும்”என்று தெளிவற்ற ஒரு அறிக்கையை விடுத்ததன் மூலம் இப்பிரச்சினை மேலும் சிக்கலான ஒரு நிலைமையை அடைந்தது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களின் கூற்றினை முஸ்லிம்களின் மார்க்கரீதியான ஆடைக்கு எதிராக கருத்தாக முஸ்லிம் மக்களில் சிலர் எடுத்துக்கொண்டுள்ளாதாக விளங்குகின்றது சம்பந்தன் ஐயா அவர்கள் குறிப்பிட்ட ஆசிரியர்கள் சாரி அணிந்து வரவேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளாரே தவிரே ஹிஜாப் அணிய வேண்டாமெனக் கூறவில்லை எனவே திரு சம்பந்தன் ஐயா அவர்களின் கருத்து அவரது காலப்பகுதியில் இலங்கையில் இருந்த முஸ்லிம் ஆடை சம்பந்தமான நடைமுறைகளை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட ஒரு கருத்தாகத்தான் முஸ்லிம்கள் எடுத்துகொள்ள வேண்டும் இத்தகைய ஆடை அணியும் முறை தற்காலத்தில் கூட முஸ்லிம்களால் முஸ்லிம் ஆசிரியைகளால் கடைபிடிக்கப்படுகின்றது.

எனவே இப்பிரசினையானது இஸ்லாமிய மார்க்கத்தின் மூலதரமான அல் குர்ஆன், அல் ஹதீஸ் எனப்படும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வினுடாக அனுமதிக்கப்பட்டவைகளை அடிப்படையகவும் எமது நாட்டு சக பிராந்திய நடைமுறைகளையும் கருத்தில்கொண்டு சுமுகமாக ஒரு முடிவை எட்டுவதன் மூலம் தீர்த்து கொள்ளவேண்டும் என்பது எனது கருத்தாகும்.

இந்த அடிப்படையில் பின்வரும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு இணைக்கப்பாடான தீர்வு ஒன்றை எட்டுமாறு பணிவாய் வேண்டிக் கொள்வதோடு இச் சபையானது இது சம்பந்தமாக தனது கருத்துகளையும் முன்வைத்து இன ஒருமைபாட்டுக்கு வழி கோல வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் .

1. முஸ்லிம் பெண்களின் ஆடையானது முகமும் மணிகட்டும் தவிர்ந்த உடலின் ஏனைய எல்லா பாகமும் ஆண்களுக்கு மத்தியில் மறைக்கப்பட வேண்டும் இப் பாடசாலையில் முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம் அல்லாத ஆண்கள் கடமையில் உள்ளார்கள் என்றால் அவ்வாறு மறைப்பது எச் சந்தர்பத்திலும் தவிர்கமுடியாத கடமையாகும் ஆண்களே இல்லாத கல்லூரியாயின் ஆண் அதிதிகளும் இப் படசாலைக்கு தமது கடமை அல்லது வேறெந்த காரணகளுக்கும் வரமாட்டார்கள் என்றிருந்தால் பெண்கள் மத்தியில் சாதாரண உடையில் இருப்பது அனுமதிக்கபட்டதாகும் இச்சட்டம் யாராலும் மீற முடியாததுடன் எவராலும் மறுக்க முடியாத தேசிய சர்வதேச சட்டங்களிலும் அங்கீகரிக்கபட்டதாகும்.

2. ஆரம்ப காலத்தில் தனி சாரி உடையில் மாத்திரமே தோன்றிய முஸ்லிம் பெண்கள் சமிபத்தில் அபாய ஆடைக்கு மாறியதனது நாகரிக வளர்ச்சியின் தாக்கமன்று உலகின் இன்றைய நாகரீக வளர்ச்சியின் தாக்கத்தினால் பெண்கள் ஆடை அமைப்பில் மாற்றம் திகழ்கிறது என்றால் மறுபுறமாக குறைவான அலங்கார மிக்க அழகை வெளிபடுத்துகின்ற ஆடையாக மாறியிருக்கவேண்டும் முஸ்லிம் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆடை மாற்றமானது இஸ்லாமிய அறிவின் அதிகரிப்பினால் நடமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும்ஆகவே முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய நடைமுறைக்கு மீண்டு வருகிறார்கள் என்பதையே இது குறிக்கும்.

3. முகமும் மணிக்கட்டும் தவிந்த ஏனைய பகுதிகள் மறைக்கப்பட வேண்டும் என்பதோடு ஆடை உடலமைப்பை வெளிபடுதுகின்ற அளவுக்கு இறுக்கமானதாக இருக்ககூடாது இது தவிர ஆடையின் நிறம் தரம் அதன் அமைப்பு சம்பந்தமான கட்டுபாடுகள் இல்லை. எனவே முஸ்லிம் பெண்கள் சாரி அணிந்து தலை மூடிய ஒரு தோற்றத்தில் இருப்பது அனுமதிக்க முடியாத ஒன்றல்ல. ஆனால் சாரியை கொண்டு தலை மூடுவதால் அது அடிக்கடி சரிந்து விழுகின்ற நிலைமையில் மறைக்க வேண்டிய கழுத்து , காது போன்ற பகுதிகள் வெளிப்படுத்தபடுவதை உணர்ந்து முஸ்லிம் பெண்கள் அபாயா என்ற ஆடைக்கு மாறிவருகின்றனர் .

4. இந்த அபாய என்ற ஆடையின் நிறம் கருப்பாக இறுக்க வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லை எனவே பாடசாலை நிர்வாகம் பாடசாலையின் சீருடை சம்பந்தம்மாக இருக்கின்ற ஆடையின் நிறம் சமபந்தம்மான கட்டுபாடுகளை முஸ்லிம் ஆசிரியைகள் பின்பற்றுவதில் சமயரீதியான எந்த தடையுமில்லை.

5. இப்பிரச்சினையை மையபடுத்தி வடக்கு கிழக்கு இணைப்பையோ ,சமஷ்டி அரசொன்றை நிறுவும் பிரேரணகளுக்கு எதிராக வலயத் தளங்களில் எதுவித எதிர்கால சிந்தனையும் இல்லாமல் நாம் நினைப்பதை எல்லாம் எழுதுவதை நியாபடுத்தமுடியாது என்பதோடு முஸ்லிம்கள் தூரநோக்கொடும்சகிப்பு தன்மை மிக்கதுமான சிந்தனையுடன் நடந்து கொள்ளவேண்டும்.

6. இது தொடர்பாக சமூக வலை தளங்களில் சம்பந்தன் ஐயா அவர்களின் புகைபடத்துடன் இளம் பெண்ணின் தொப்புள் தெரியும் படியான புகைப்படங்களை வெளியிடும் அநாகரிகமான செயற்பாடுகளை முஸ்லிம்கள் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

7. இந்து மாணவிகள் பாடசாலை சீருடை ஆபாசமானது என்று ஒரு முஸ்லிம் அமைப்பை சார்ந்த ஒருவர் கருத்து வெளியிட்டிருப்பது முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துபடுத்துவதாக அமையாது. என்றாலும் கூடஇருந்தபோதிலும் இவ்வாறன பொருத்தமற்ற கருத்துக்களை முஸ்லிம்கள் யாரும் வெளியடக்கூடாது தத்தமது அல்லது தான் விரும்பும் சமயத்தினை பின்பற்றும் போதிக்கும் நடைமுறைபடுத்தும் உரிமை அச்சமயம் சார்ந்த சமூக அங்கததவர்களுக்கு உண்டு ஆனால் பிற கலாச்சாரங்களை அநாகரிகமான முறையில் விமர்ச்சிக்கும் உரிமையை இஸ்லாம் மறுத்துள்ளது என்பதனையும் எமது முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

8. தான் சார்ந்த சமுகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது ஒவ்வொரு சமூகத்திற்கும் அது சார்ந்த தனி மனிதர்களுக்கும் உள்ள சுதந்திரமாகும். தான் சார்ந்த சமூகம் இன்னொரு சமூகத்திற்கு எதிராக பிழை செய்யும் போது தான் சார்ந்த சமூகத்திற்கு அல்லது அந்த சமூகத்தின் மதிபிறக்கம் குறைந்து விடாமல் இருப்பதற்ககு அப்பிழையை மறைத்து தான் சார்ந்த சமூகத்திற்கு சார்பாக கருத்து சொல்வது வாதிடுவது போன்ற செயற்பாடுகள் இனத்துவேசத்தின் வெளிப்பாடாகும்.

இவ்வாறு ஈனமிக்க செயல் கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றது தமிழ் ஆயுத போராட்டத்திற்கெதிரான யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிரான கட்டவிழ்த்து விடப்பட்ட அநியாங்களை சர்வேதச மட்டத்தில் நியாயப்படுத்தி அதற்கு ஆதரவாக முஸ்லிம் நாட்டு தலைவர்களின் வாக்குளை ஐக்கிய நாடுகள் சபையில் பெற்று கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்தின் மார்க்க அறிஞர்களின் இரு பிரதான பிரதிநிதிகளை கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் தலைமையில் அனுப்பி வைத்தமை முஸ்லிம்கள் சார்பாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இழைக்கபட்ட்ட அநியயாமாகும். இச்செயல் நடைபெற்ற போது இதனை நான் வன்மையாக கண்டித்தேன் இப்போது எனக்கு கிடைத்த ஒரு சந்தர்பத்தில் இந்த நியாயமற்ற செயலுக்காக எனது முஸ்லிம் சமூகம் சார்பாக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்ளகிறேன். பழைய கதையான இதனை நினைவூட்டாமல் விட்டுவிடுவோம் என்று நான் பல தடவைகள் நினைத்த போது எனது மனசாட்சி மன்னிப்பு கேட்பதே பொருத்தமானது என கருதியதால் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

ஒரு நாட்டில் அல்லது ஒரு பிரதேசத்தில் ஒரு சமூகத்திற்கு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிகையிலான சமுகங்களுக்கிடையில் மனிதர் என்ற வகையில் பிரச்சினைகளை எழுவதுண்டு ஆகவே நான் அல்லது நம்மவர்கள் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பது மனித இனத்திற்கு மனிதன் செய்யும் பெரிய அநியயாமாகும். பிரச்சினைகளை கதைத்து தீர்த்து கொள்வதில் இயற்கையான ஒரு நீதி கடைபிடிக்கப்பட வேண்டும். நீதி மட்டுமே தீர்வின் ஆரம்பமும் அடிப்படையுமாக இருத்தல் வேண்டும் இந்த நீதியை விளங்கி கொள்வதற்கு மனசாட்சி இருந்தால் போதுமானாதாகும். இந்த இயற்கையான நீதியை விளங்கி கொள்வதற்கு ஒருவன் பேரறிஞராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.இந்த நாட்டில் படித்த அனுபவமிக்கவரக்ளும் தத்தமது மனசாட்சியை புரிந்து கொள்ளமுடியாத நிலை காணப்டுகின்றது.

இது தான் இன்றைய சமூகங்களுகிடையில் இனபிரசினைக்கு தீர்வொன்றை எட்டமுடியாததற்கு அடிப்படை காரணமாகும்.

Related posts

சமுர்த்தி வழங்கிய விடயத்தில் அரசியல்வாதிகள் உரிமை கோரமுடியாது.

wpengine

ஆளுங்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு!

Editor

துறைமுக நகர ஆணைக்குழு சம்பந்தமாக சட்டமூலம் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவை

wpengine