பிரதான செய்திகள்

திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் மு.கா உயர்பீட உறுப்பினர்கள் றியாழும், இஸ்மாயில் ஹாஜியும்.

(கல்குடா நேசன் நேசன்)

நெல்சிப் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஓட்டமாவடி மீன் சந்தைக் கட்டடத் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களின் பெயர் இணைக்கப்படாமையால் பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் அதிருப்பதினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நெல்சிப் வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி மீன் சந்தைக்கட்டடம் இன்று (22 ஜூன் 2016) கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட் அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இத்திறப்பு விழாவிற்கான அழைப்பிதழில் கல்குடாத்தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களின் பெயர் உள்வாங்கப்படவில்லை.

கல்குடாத்தொகுதியில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இவ்வுறுப்பினர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார்களா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதாக தமது அதிருப்தியை வெளியிடும் மூத்த உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

கல்குடாவில் தற்போது கட்சி  சார்பாக பிரதிநிதி  யாரும் இல்லாத நிலையில் இவர்கள் இருவரும் இந் நிகழ்வு அழைப்பிதலில்       உள்வாங்கப்ட்டிருக்க வேண்டும் .

Related posts

சிறுவர் துஷ்பிரயோகம்,பெண்கள் பாலியல் பலாத்காரம் தகுந்த தண்டனைகள் வழங்குவதன் மூலம் சிறந்த பாடம் கற்பிக்கப்படல் வேண்டும்-அமைச்சர் சந்திராணி பண்டார

wpengine

ரணில் மற்றும் அரச மருத்துவ சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

Maash

7 பில்லியன் நுகர்வோர் அமெரிக்க பொருட்களை வாங்குவதை நிறுத்தினால், அமெரிக்க பொருளாதாரம் சுவருக்குள் சரிந்துவிடும்.

Maash