பிரதான செய்திகள்

திகனயில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பெருநாள் தொழுகை

(தவ்ஹீத் ஜமாத் -SLTJ)

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – திகன கிளை நடாத்திய பெருநாள் திடல் தொழுகை இன்று கனிசம மைதானத்தில் நடைபெற்றது.

தவ்ஹீத் ஜமாத்தின் பெருநாள் தொழுகைக்கு எதிராக மஹா சொஹொன் பலகாய என்ற இனவாத அமைப்பினர் ஆர்பாட்டம் செய்யப்போவதாகவும், திடல் தொழுகை நடத்தக் கூடாது எனவும் அறிவிப்பு செய்திருந்தனர்.

இனவாதிகளின் எதிர்ப்பை மீறி இறைவனின் அல்லாஹ்வின் உதவியால் எதிர்பார்ததை விட சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.

பாதுகாப்பு நிமித்தமாக பொலிஸ் தரப்பினர் பெருவாரியாக குவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ஹிஷாம் மன்சூர் உரையாற்றி தொழுகை நடத்தினார்.

இனவாதிகள் டான் பிரசாத், அமித் வீரசிங்க மற்றும் இரண்டு பிக்குகளுடன் பத்துக்கு உட்பட்டவர்கள் ஆர்பாட்டத்திற்க்கு என்று வருகை தந்த நிலையில் பொலிசார் அவர்களையும் திருப்பியனுப்பினார்கள்.

Related posts

பொதுஜன பெரமூன கட்சியின் மன்னார் மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற வேட்பாளாராக ஜெஸார்

wpengine

இந்த சிறுமிக்கு உதவி செய்வோம்! 8லச்சம் தேவை

wpengine

வடக்கு மாகாணத்தின் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை

wpengine