பிரதான செய்திகள்

தாஜூடின் கொலை வழக்கு; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

றக்பி வீரர் வசீம் தாஜூடின் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (03) இடம்பெற்ற போது கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

றக்பி வீரர் வசீம் தாஜூடின் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மன்னாரில் பேரணி.

wpengine

முல்லைத்தீவின் அனைத்து தனியார் பேரூந்து சங்க அங்கத்தவர்கள் கலந்துகொள்ளவேண்டும் – அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

இரண்டு பதவிகளையும் இராஜினாமா செய்தார் அசாத் சாலி

wpengine