பிரதான செய்திகள்

தாஜூடின் கொலை! சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர விசாரணை

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எல்.ரணவீரவிடமும் ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

விசாரணைகளுக்காக நாளை குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு ரணவீரவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கொலை இடம்பெற்ற காலப்பகுதியில் ரணவீர கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

கொலை தொடர்பில் உரிய விசாரணைகளை ரணவீர மேற்கொள்ளத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாஜூடின் கொலை தொடர்பில் அப்போது கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவின் பூரண கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணவீர தற்போது அம்பாறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி வருகின்றார்.

Related posts

இராஜாங்க அமைச்சரின் பணிகளை கூட செய்யமுடியவில்லை பிரதமரிடம் முறைப்பாடு

wpengine

தலைமன்னாரில் கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்பு: ஒருவர் கைது

wpengine

கொள்வனவு செய்யப்பட்ட நெல்லினை சந்தைப்படுத்துவதற்கு தீர்மானம்

wpengine