பிரதான செய்திகள்

தாஜுடீன் கொலையுடன் பிரபல நபரின் மனைவிக்கு தொடர்பு

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய தற்போது வரையில் மேற்கொண்ட விசாரணைகளில் இதற்கு முன்னர் அதிகாரத்தில் இருந்த பிரபலம் ஒருவரின் மனைவி தொடர்புப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் கொலை இடம்பெற்ற தினத்தன்று குறித்த கொலைக்காக வந்த நபர்களுடன் தொடர்புப்பட்டிருந்த முறை தற்போது தெரியவந்துள்ளது.

அது விஞ்ஞான ரீதியான சாட்சிகளுக்கமையே அவர் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் வெளியாகியுள்ளதனை தொடர்ந்து குறித்த பிரபலத்தின் மனைவி பல்வேறு விகாரைகளுக்கு சென்று தீவிர மத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த பெண் உட்பட அவரது முழு குடும்பமும் கொலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பலவற்றிற்கு தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வில்பத்து பிரச்சினை! மோடிக்கு பின்னால் நின்ற ஹக்கீமால் ஏன் சர்வதேச மயப்படுத்தவில்லை?

wpengine

மஹரகம வர்த்தக நிலைய தீ மூட்டிய சம்பவம்! சந்தோக நபர் கைது

wpengine

காங்கிரஸுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முஸ்தீபு; அவதானம் தேவை என்கின்றார் தலைவர் ரிஷாட்!

wpengine