பிரதான செய்திகள்

தாக்­கு­தல்­களை கட்­டுப்­ப­டுத்த சிறப்புத் திட்டம்

முஸ்­லிம்­களின் வழிபாட்டுத் தலங்கள், அவர்­க­ளது வர்த்­தக நிலை­யங்கள் மீது தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களும் தீ வைப்புச் சம்­ப­வங்­களும் இடம்­பெற்று வரும் நிலையில் அவ்­வா­றான சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்த விசேட திட்­டத்தை அமுல் செய்ய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஒவ்­வொரு பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியும் தங்­களின் பொலிஸ் பிரிவில் இடம்­பெறும் இவ்­வா­றான வழிபாட்டுத்தலங்கள், வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்கள் மற்றும் இன ரீதி­யி­லான செயற்­பா­டுகள் தொடர்பில் பொறுப்புக் கூறும் வித­மாக இந்த திட்­டத்தை அமுல் செய்ய சாகல ரத்­நா­யக்­க­வுக்கு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உத்­த­ர­விட்­டுள்ளார்.

அதன்­படி உட­ன­டி­யாக குறித்த விடயம் அமுல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதனை விட சட்­டத்தை கையி­லெ­டுத்து செயற்­படும் அனைத்து தனி நபர்­க­ளுக்கும் எதி­ராக பாரா­பட்­ச­மின்றி கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேன சாக­ல­வுக்கு உத்­த­ர­விட்டார்.

ஜனா­தி­பதி தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் போதே இந்த உத்­த­ர­வு­களை அமுல் செய்ய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­வுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

நேற்­றைய தினம் அமைச்­ச­ரவை கூட்டம் இடம்­பெற்ற போது சிறு­பா­னமை இனத்­த­வர்கள் மீது முன்­னெ­டுக்­கப்­படும் கெடு­பி­டிகள், தற்­போது உரு­வாகி வரும் அச்­சு­றுத்­த­லுடன் கூடிய சூழல் தொடர்பில் அமைச்­சர்­க­ளான மனோ கணேசன், ரிஷாட் பதி­யுதீன், ரவூப் ஹகீம், கபீர் ஹசீம், துமிந்த திஸா­ந­யக்க, தலதா அத்­து­கோ­ரள உள்­ளிட்­ட­வர்கள் அமைச்­ச­ர­வையின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தனர்.

முதலில் இந்த விவ­காரம் குறித்து அமைச்­ச­ர­வையில் கருத்து தெரி­வித்த கனேசன்,

இன்று ( நேற்று) அதி­காலை கூட காவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன, சிறு­பான்­மை­யினர் மீதான திட்­ட­மிட்ட தாக்­கு­தல்கள் தொடர்­கின்­றன.

எனது அமைச்­சுக்குள் அமைச்சில் பொது­பல சேனைவின் அத்து மீறு­கின்­றனர். இதன் முடிவு என்ன. ஏன் இது குறித்து சட்டம் அமுல் செய்­யப்­ப­டு­வ­தில்லை.

எனது அமைச்­சுக்குள் அல்­லது நான் செல்லும் இடங்­களில் எந்த தீவி­ர­வாத சக்­திகள் வந்­தாலும் என்னால் அவர்­களை எதிர்­கொள்ள முடியும் எனது அமைச்­சுக்கு சிங்­க­மாக வந்த பொது­பல சேனா செய­லாளர் ஞான­சார தேரர் பூனை­யாக திரும்பி போனார்.

ஆனால், சாதா­ரண மக்­களின் நிலைமை அது­வல்ல. அவர்­க­ளுக்கு பெரும் அச்சம் ஏற்­பட்­டுள்­ளது. 2015 ஆம் வருடம் நடை­பெற்ற இரண்டு தேர்­தல்­க­ளிலும் ஐக்­கிய தேசிய முன்­னணி, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி, ஆகிய கட்­சி­க­ளுக்கு நல்­லாட்­சிக்­காக வாக்­க­ளித்த சிறு­பான்மை மக்­களை, எமது அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து பிரித்து, எதிர்­வரும் தேர்தல் காலங்­களில் வாக்­க­ளிக்­காமல், அவர்­களை வீட்டில் இருக்க செய்யும் திட்­டமே இது­வாகும். என ஆவே­சத்­துடன் மனோ கனேசன் அமைச்­ச­ர­வையில் தீர்­மா­ன­மெ­டுக்க வேண்­டினர்.

இத­னை­ய­டுத்து அடுத்து, அமைச்­சர்கள் ரிசாத் பதி­யுதீன், ஞான­சார தேரர் முஸ்­லிம்கள் தொடர்பில் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்கும் இன­வாத செயற்­பா­டுகள், அவர் மீது சட்­டத்தை அமுல் செய்ய அர­சாங்கம் தயங்­கு­வதன் பின்­னணி என்ன என்­பது குறித்து அமைச்­ச­ர­வையில் கேள்வி எழுப்­பினார்.

இதன் போது அமைச்­சர்­க­ளான கபீர் ஹசீம், ரவூப் ஹக்கிம், துமிந்த திசா­நா­யக்க, உள்­ளிட்­டோரும் இது குறித்து தத்­த­மது கருத்­துக்­களை பதிவு செய்­தனர். இத­னை­ய­டுத்து தற்­போது குறித்த செயற்­பா­டுகள் தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுக்கும் செயன்­மு­றைகள் நடை­மு­றையில் உள்­ள­தாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­னா­யக்க தெரி­வித்­துள்ளார்.

காவத்தை நகரில் நேற்று அதி­காலை இடம்­பெற்ற தீ வைப்புச் சம்­பவம் தொடர்பில்இ அப்­பி­ர­தே­சத்தை சேர்ந்த அமைச்சர் தலதா அத்­து­கோ­ரல அமைச்­ச­ர­வையில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அமைச்­சர்­களின் கருத்­துக்­களை மிக அமை­தி­யாக கேட்­டுக்­கொண்­டி­ருந்த நிலையில் அமைச்­ச­ர­வையில் எழுப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதிஇ சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­வுக்கு சட்டம், ஒழுங்கை நிலை­நாட்­டு­வதில் என்ன பிரச்­சினை உள்­ளது என்று கேள்வி எழுப்­பினார். தயவு தாட்­சண்யம் இல்­லாமல் கடும் முறையில் சட்டம்இ ஒழுங்கை நிலை­நாட்­டு­மாறு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­வுக்கு, ஜனா­தி­பதி இதன் போது பணிப்­புரை விடுத்­துள்ளார்.

அதை­ய­டுத்து இந்த இன­வாத செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்தல் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கஇ விளக்­க­ம­ளித்­துள்­ள­துடன் எந்த வகையில் அவற்ரைக் கட்­டுப்­ப­டுத்­தலாம் என்­பது குரித்து ஆலோ­ச­னை­களை சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ருக்கு வழங்­கி­யுள்ளார்.

சம்­ப­வங்கள் நடை­பெறும் பிர­தே­சங்­களில் பொறுப்பில் இருக்கும் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள் நடை­பெறும் சம்­ப­வங்கள் தொடர்பில் பொறுப்பு கூறி­வைக்கும் நடை­மு­றையை உட­ன­டி­யாக அமுல் செய்­யு­மாறு, சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­வுக்கு இதன் போது பிர­தமர் பணிப்­புரை விடுத்­துள்ளார்.

இதன் போது தன்னை நேற்று ( நேற்று முன் தினம் ) முஸ்லிம் அமைச்­சர்கள், எம்­.பீக்கள் சந்­தித்­த­தாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க அமைச்சரவைக்கு தெரிவித்தார். அதையடுத்து இதை முஸ்லிம் பிரச்சினையாக பார்க்காமல், சட்டம்இ ஒழுங்கு பொது பிரச்சினையாக பார்த்து நடவடிக்கை எடுக்கும்படி, ஜனாதிபதி, அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை இனவாத மதவாத செயற்பாடுகள், வழிபாட்டு நிலையங்கள் மீதான செயற்பாடுகளை கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஊடாக பொலிஸாருக்கு விஷேட ஆலோசனைகளும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ரஜினிகாந்த் உள்பட 56 பேருக்கு பத்ம விருதுகள்- ஜனாதிபதி வழங்கினார்!

wpengine

நோன்பு குறித்த சுற்றறிக்கைக்கு முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன?

Editor

றிஷாட்டை வீழ்த்த சில தமிழ்,சிங்கள இனவாதிகள்! தீனிபோடும் தலைவர் ஹக்கீம்

wpengine