பிரதான செய்திகள்

‘தவறான போதனைகளுடனான பாடசாலைப் புத்தகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’

பிரிவினைவாத மற்றும் தவறான போதனைகளுடனான பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென, பாதுகாப்பு  செயலாளர் ஓய்வுப்பெற்ற  ​ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்துள்ளார்.

அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

கடந்த வாரம் கல்வி அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தவறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் பாடப்பத்தகங்களை முற்றாக தடை செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டதென்றும், எனவே இவ்வாறான பாடப்புத்தகங்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் செல்வதைத் தடுக்க வேண்டும் என்றார்.

தற்போது இவ்வாறான விடயங்களை உள்ளடக்கிய புத்தகங்கள் இலங்கைக்குக்  கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தாம் அவற்றை அடையாளம் கண்டுள்ளதுடன், அவற்றில் பெரும்பாலானவை சுங்கத் திணைக்களத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதென்றார்.

பிரிவினைவாதிகள் நாட்டில் எதையாவது ஒன்றை செய்ய முயற்சி செய்யலாம். ஆனால் எமது புலனாய்வு பிரிவு சிறப்பாக செயற்படும் வரையிலும் பொலிஸாரும்  இராணுவத்தினரும் மிகவும் அவதானத்துடன் செயற்படும் வரை பிரிவினைவாதிகள் நினைப்பது இலகுவில் நடக்காது என்றார்.

Related posts

கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது! முன்னணி

wpengine

கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி பகுதி ஊடாக ISIS பயங்கரவாதிகள் -பொதுபல சேன

wpengine

அம்பாறை,கண்டி மோதல் சிங்கள முஸ்லிம் பிரச்சினை அல்ல

wpengine