பிரதான செய்திகள்

தவறான தொலைபேசி தொடர்பு! மாட்டிக்கொண்ட ஆசிரியை

அழுத்கம பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் இந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளார்.

தெரியாத தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்ட இளைஞனுடன் உரையாடியமைால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியை தனக்கு தவறாக வந்த தொலைபேசி அழைப்பில் அறிமுகமாகிய இளைஞருடன் உறவை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கு இடையில் தொடர்ந்து தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த தொலைபேசி உரையாடலில் அணியும் ஆடை, உணவு, தங்குமிடம் உட்பட பல விடயம் தொடர்பில் உரையாடப்பட்டுள்ளது.

இந்த உறவு மேலும் நெருக்கம் அடைந்ததுடன், பாலியல் வாழ்க்கை தொடர்பில் உரையாடியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் குறித்த இளைஞன், ஆசிரியை மிரட்டும் வகையில் செயற்படுவதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியை தன்னிடம் உரையாடிய அனைத்து விடயங்களையும், பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த ஆசிரியை உடனடியாக பொலிஸாரின் உதவியை கோரியுள்ளார்.

இது தொடர்பில் அழுத்கம பொலிஸாரினால் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related posts

இராஜாங்க அமைச்சரின் பணிகளை கூட செய்யமுடியவில்லை பிரதமரிடம் முறைப்பாடு

wpengine

காதலனை கரம்பிடிக்க அரச குடும்ப அந்தஸ்தை இழக்க இருக்கும் ஜப்பான் இளவரசி

wpengine

சம்பிக்க ரணவக்கவின் வாயாலேயே உண்மை வெளிப்பட்டது!

wpengine