பிரதான செய்திகள்

தலைவர் ஹக்கீமின் சொத்து விபரங்கள் தொடர்பில் வெளியீட வேண்டும்.

‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ரிடம் தேவை­யா­ன­ள­வுக்கு சொத்­துக்­களும் செல்­வங்­களும் இருக்­கின்­றன. தாருல்­ஸலாம் போன்று 10 கட்­ட­டங்கள் நிர்­மா­ணித்துக் கொள்­ளு­ம­ள­வுக்கு அவ­ரிடம் செல்வம் இருக்­கி­றது’ என முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வரும் விளை­யாட்­டுத்­துறை பிர­தி­ய­மைச்­ச­ரு­மான எம்.ஹரிஸ் பகி­ரங்க கூட்­ட­மொன்றில் கருத்து தெரி­வித்­தமை தொடர்பில் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­வுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் அம்­பாறை மாவட்­டத்தில் வசிக்கும் ஏ.ஆர்.எம்.பாயிஸ் என்­பவர் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­த­தத்தில் பிர­தி­ய­மைச்­சரின் மேற்­படி கூற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்­கீமின் சொத்து விப­ரங்கள் தொடர்பில் தெ ளிவு­ப­டுத்தக் கோரி 12 கேள்­விகள் அடங்­கிய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்ளார்.

இம்­மாதம் 20 ஆம் திக­தி­யி­டப்­பட்ட அக்­க­டித்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின்  2005  முதல் 2015 வரை­யி­லான காலப்­ப­கு­தியின் கணக்­க­றிக்கை தொடர்­பாக வின­வப்­பட்­டுள்­ளது.

பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட கணக்­க­றிக்கை முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் ஆணைக்­கு­ழு­வுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளதா எனவும் வின­வப்­பட்­டுள்­ளது.

பிர­தி­ய­மைச்­சரின் குறிப்­பிட்ட உரை கல்­மு­னையில் இடம்­பெற்­ற­தா­கவும் அவ்­வு­ரையில் ” தேர்­தல்­களில் போட்­டி­யிடும் போதும் கட்­சியின் கூட்­டங்கள் ஏற்­பாடு செய்­யப்­படும் சந்­தர்ப்­பங்­க­ளிலும் செல­வு­க­ளுக்கு உண்­டியல் மூலம் நிதி சேக­ரிக்க வேண்­டிய நிலைமை ஏற்­ப­ட­வில்லை.  இவ்­வா­றான பாரிய செல­வு­களை கட்­சியின் தலை­வரே ஏற்றுக் கொண்­டுள்ளார்” என பிர­தி­ய­மைச்சர் குறிப்­பிட்­டி­ருந்­த­தா­கவும் அக் கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அதன் தலை­வரின் சொத்­துக்கள் கடன்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்­பு­வ­தா­கவும் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்­தல்­களில் போட்­டி­யிடும் சந்­தர்ப்­பங்­களில் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்பும் அதற்குப் பின்பும் தனது சொத்­துக்­க­ளையும் கடன்­க­ளையும் ஆணைக்­கு­ழு­வுக்கு வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளாரா எனவும் வின­வப்­பட்­டுள்­ளது.

பிர­தி­ய­மைச்சர் ஹரீஸ் தெரி­வித்­துள்­ளது போன்று பெரும் சொத்­துக்­க­ளையும் செல்­வங்­க­ளையும் கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விடம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யி­ரா­து­விடின் அவ­ருக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா எனவும் அக் கடி­தத்தில் கேள்­வி­யெ­ழுப்­பப்­பட்­டுள்­ளது.

பிர­தி­ய­மைச்சர் ஹரீஸ் தெரி­வித்­துள்ள படியான சொத்துக்களையும் செல்வங்களையும் வெளிப்படுத்தியிருக்காதுவிடின் இது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஏற்பாடு செய்யப்படுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன் விரைவான பதிலை எதிர்பார்ப்பதாகவும் அக் கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

இலவசக்கல்வியின் தரம் குன்றிய நிலையிலேயே காணப்படுகின்றது இஷாக் பா.உ

wpengine

வீதிப் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மன்னாரில் விழிப்புணர்வு

wpengine

வில்பத்து காடழிப்பிற்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

wpengine