பிரதான செய்திகள்

தலைவர், உப தலைவர் நியமனத்தின் போது ஊழல் மோசடிகள்

இந்த தேர்தல் முறைமை பொருத்தமற்றது என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

திருத்தி அமைக்கப்பட்ட தேர்தல் முறைமை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட வேண்டும்.
மக்களின் உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் தொகுதிவாரி தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டது.

எனினும் இந்த நோக்கம் நிறைவேற்றப்படாது பல்வேறு பிரச்சினைகளே எழுந்துள்ளன.
தலைவர்கள், உப தலைவர்கள் நியமனத்தின் போது பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி நிறுவும் போது ஏற்படும் பிணக்குகள் காரணமாக இந்த தேர்தல் முறைமையின் பலவீனம் தெளிவாக அம்பலமாகியுள்ளது.

அடுத்த தேர்தலின் போது இந்த முறைமை முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். அத்துடன், பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் தொடர்ந்தும் பிரச்சினை நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உப்பு உற்பத்தியில் இரு வருடங்களில் இலங்கை தன்னிறைவு அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை

wpengine

அமைச்சர் றிஷாட்டிடம் தோற்றுப்போன வை.எல்.எஸ். ஹமீட்

wpengine

காட்டுமிராண்டித்தனமான இந்த அரசை மக்களின் ஆணையுடன் வேரோடு பிடுங்கி வீச வேண்டும்- சஜித்

wpengine