பிரதான செய்திகள்

தலைமன்னார் வைத்தியர்களின் அசமந்த போக்கு! மக்கள் அசௌகரியம்

(கரீம் ஏ.மிஸ்காத்)

தலைமன்னார் பிரதேச  வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி  உரிய நேரத்திற்கு வருகை தராததால், காலை 8:00 மணியில் இருந்து  காலை 10:15 மணிவரை   மக்கள் காத்திருந்தும், சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு மிகவும் கஷ்டபட்டனர்.

இவ்வாறான நிலையில்இந்த விடயம்பற்றி  மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரி  திருமதி . ரஜினிக்கு  தொலைபேசியில் தெரிவிக்கப்பட்ட போது உடனடியாக, செயல்பட்டு  அருகிலிருந்த  பேசாலை வைத்தியசாலையிலிருந்து வேறொரு வைத்திய அதிகாரியை அனுப்பி குறித்த பிரச்சினைக்கு உடனடி தீர்வினை பெற்றுத்து தந்தார்.

குறித்த விடயம்பற்றி தாம் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் இவ்வாறான பிரச்சனை தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அங்கிருந்த நோயாளர்கள் தெரிவித்தனர்.030330a1-b1e8-4630-8c1b-f97c3fedef0d

அத்தோடு குறித்த வைத்தியசாலையானது தலைமன்னார் – இந்தியா இராமேஸ்வரம்,கப்பல் போக்குவரத்து இடம்பெற்ற காலங்களில்  வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிலையமாகவும் செயல்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.07a3377c-4353-4e75-a128-17b82ba99c4a0485f372-03cb-45e9-a5f6-01a12858743d

Related posts

பொலிஸ் சேவையில் 2,500 பேரை அவசரமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி..!

Maash

Braking பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம்

wpengine

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின்  முழு நிலா கலைவிழா.

wpengine