பிரதான செய்திகள்

தலைமன்னார், தாராபுரம் பகுதியில் ஒருவர் பணத்துடன் கைது

மன்னார் – தலைமன்னார், தாராபுரம் பகுதியில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சோதனைச் சாவடியில் நேற்று மாலை இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, அந்த இளைஞரிடமிருந்து வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் ஒரு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான அமெரிக்க டொலர்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரிடம் மீட்கப்பட்ட நாணயத்தாள்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சிறையில் மஹிந்த! மக்கள் விரும்பும் தலைவர்களை கைதுசெய்தும் அரசாங்கம்

wpengine

காடழிப்புக்கு எதிராக சஜித்,ஹிருணிக்கா கொழும்பில் ஒன்றுகூடல்

wpengine

இலங்கைக்கு புதிதாக வரும் நாணய குற்றி,நாணய தாள்

wpengine