பிரதான செய்திகள்

தலைமன்னார் ஆலய சொத்தை கொள்ளையிட முயற்சி! சிலர் மௌனம்

மன்னாரில் உள்ள பல கோடி ரூபா பெறுமதியான ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரிக்க முயற்சி இடம்பெறுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தலைமன்னார் ஊறுமலை பகுதியில் உள்ள சென் லோரன்ஸ் ஆலயத்தில் உள்ள மிகப் பெறுமதியான ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரித்து விற்பனை செய்ய ஒரு இரகசியக் குழுவினர் குறித்த ஆலயத்தில் உள்ள சில நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி பல முயற்சிகளை எடுப்பதாகவும்,
தற்பொழுது இலங்கையில் பாவனையில் உள்ள குறைந்த விலையிலான இடிதாங்கி ஒன்றினை அவ் ஆலயத்தில் பொருத்திவிட்டு பல ஆண்டு காலமாக பொருத்தப்பட்டுள்ள ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரித்து சுமார் நான்கு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த அபகரிப்பு வேலை கிராமத்தில் உள்ள சில நபர்களுக்கு தெரியவந்ததும் இது தொடர்பில் எதற்காக இதனை விற்பனை செய்ய முயற்சிக்கின்றீர்கள் எனஅவர்கள் ஆலயத்தில் உள்ள சில நிர்வாக உறுப்பினர்களை வினவியுள்ளனர்.

அதற்கு, தமது திருட்டு வேலையிலிருந்து தப்பிக்க, இதில் கிடைக்கும் பணத்தை எடுத்து சில அபிவிருத்திப் பணிகளை செய்யவிருப்பதாக குறித்த இரகசியக் குழுவினருடன் தொடர்பில் உள்ள ஆலய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹக்கீமும், ரிசாத் பதியு­தீனும் முஸ்லிம்களை பிளவுபடுத்தி விட்டனர் – வட்டரக்க விஜித தேரர்

wpengine

01 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட 12,000 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது..!

Maash

நல்லாட்சி அரசின் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் ஐ.நா.வில் அறிக்கை

wpengine