செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

தலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்கு படகில் செல்ல முயன்ற மூவர் கைது..!

தலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாகப் படகுமூலம் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் தலைமன்னார் பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் மூவரும் தலைமன்னாரிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல முயற்சித்தபோது, கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பை சேர்ந்த அவர்கள் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, வாள்வெட்டு ஆகிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மூவருக்கும், உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சமூக வலைத்தளங்களில் Faceapp Challenge பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

wpengine

ராஜபஷ்ச,விமல் மற்றும் கம்மன்பில இரகசிய சந்திப்பு

wpengine

கணவன் சுட்டுக் கொலை! வழக்கில் சாட்சியான கிளி (வீடியோ)

wpengine