பிரதான செய்திகள்

தற்கொலை தாக்குதல் முன்னரே தகவல் அறிந்திருந்ததாக பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு

இலங்கையில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் முன்னரே தகவல் அறிந்திருந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை முன்னரே கிடைத்த போதிலும் தாக்குதலை தவிர்க்க போதுமான நடவடிக்கை எடுக்காது ஏன் என பாதுகாப்பு செயலாளரிடம், சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர்,
சில விடயங்கள் நடக்கும் என என்னிடம் முன்னரே அறிவித்தார்கள்.

எனினும் இலங்கை ஜனநாயக நாடு, அவசரகால சட்டத்தை செயற்படுத்த முடியாது என்பதால் தான் எடுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறைவாகவே காணப்பட்டன.

இந்தத் தாக்குதல்களுக்கு சில அமைப்புகள் பொறுப்பு கூற வேண்டும். தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது.

போர் இடம்பெற்ற காலப்பகுதிகளில் ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இனி ஹோட்டல் பாதுகாப்பிற்கு அதன் உரிமையாளர்களே பாதுகாப்பாக செயல்பட வேண்டும். அது தொடர்பான பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க முடியாது.

தேவாலயங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரியும், அது தொடர்பில் எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இவ்வளவு பெரிய ஆபத்து வரும் என எதிர்பார்க்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவருக்கு பதவி உயர்வு!

Editor

அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான இஸ்லாமிய மாநாடு

wpengine

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

wpengine