பிரதான செய்திகள்

தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்

இலங்கையின் உயர்பதவிகளுக்கான தெரிவுப்பரீட்சைகளில் தெரிவாகும் தமிழ்மொழிமூல பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை வரவரக் குறைவடைந்து செல்வதையிட்டு விசனம் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் வெளியான இலங்கை கணக்காளர் சேவைக்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைகளில் 187பேர் சித்தியடைந்து தெரிவாகியுள்ளனர்.

இவர்களுள் 183பேர் பெரும்பான்மையினராகவிருக்க ஆக 4பேரே சிறுபான்மையினராகவுள்ளனர். அவர்களுள் மூவர் தமிழர்கள் ஒருவர் முஸ்லிம்.
இனவிகிதாசாரப்படி மொழிரீதியான பரீட்சையினடிப்படையில் தெரிவாகியிருப்பின் சிங்களவர் 157பேரும் தமிழர் 18பேரும் முஸ்லிம்கள் 12பேரும் அண்ணளவாகத் தெரிவாகியிருக்க வேண்டும்.

நேற்றுமுன்தினம் வெளியாகிய இலங்கை திட்டமிடல் சேவைக்கான பரீட்சைப்பெறுபேற்றினடிப்படையில் 31பேர் நேர்முகப்பரீட்சைக்குத் தெரிவாகியுள்ளனர். அவர்களில் 30பேர் பெரும்பான்மையினம். ஒருவர் மாத்திரமே சிறுபான்மையினம். ஜெகநாதன் என்ற தமிழ்மகன் ஒருவராவார்.

இப்பரீட்சைகள் தமிழ் சிங்கள மொழி வாரியாக நடாத்தப்படுகின்றபோதிலும் பெறுபேறு பொதுவாகவே பார்க்கப்படுகின்றது.
இலங்கையின்உயர்பதவிகளுக்கு இவ்வாறு இனவிகிதாசாரத்திலில்லாது மிகவும் குறைந்த தொகையினர் தெரிவாகிவருவது எதிர்காலத்தில் பலவிளைவுகளை உருவாக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் காலத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றின் அடிப்படையில் பரீட்சைப் புள்ளித்திறமை அடிப்படையில் தெரிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டதன் பலனாக அந்நடைமுறை தொடர்கிறது.

இதுவிடயத்தில் தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையிட்டு உரிய நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சிறுபான்மையின சமுகம் கேட்டுக்கொள்கிறது.

Related posts

எனக்கு இலட்சியமே இல்லை – கவிஞர் நிஷா மன்சூர்! (வீடியோ இணைப்பு)

wpengine

இன ரீதியான கட்சிகள் தான் பிரிவுகளுக்கு காரணம் -அவுஸ்­தி­ரே­லிய பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் அமீர் அலி

wpengine

வாசுதேவின் அமைச்சில் சில துறையில் மாற்றம்

wpengine