பிரதான செய்திகள்

தமிழ் மக்கள் பேரவை பிரிவினைவாதத்தை வெற்றிகொள்ள தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர் -ஞானசார

தமிழீழ விடுதலைப் புலிகளை பார்க்கிலும், தமிழ் மக்கள் பேரவை மிகவும் ஆபத்தானது என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இராணுவத்தினர் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை விடவும் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடு மிகவும் ஆபத்தானது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில் எமக்கான அச்சுறுத்தல் என்னவென்று தெரிந்தது. எனினும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச ரீதியில் அவர்களது பிரிவினைவாதத்தை வெற்றிகொள்ள தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்த சிங்களவர்களை துரத்தயடிக்கின்றனர். தென்னிலங்கையில் அரசாங்கம் ஆட்சி செய்துகொண்டிருப்பதாக கூறுகின்றது.

எனினும், வடக்கில் அரசாங்கத்தின் ஆட்சி நடைபெறவில்லை. வடக்கில் சிங்களவர்கள் வாழ்வதற்கான உரிமை இல்லாமல்போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

ரணிலின் பொறியில் சிக்கிய எலி

wpengine

நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைத்துள்ளது.

wpengine

களுத்துறையில் இடம்பெற்ற மீலாத் விழா

wpengine