பிரதான செய்திகள்

தமிழ் மக்களின் போராட்டத்திலும்,உரிமை விடயத்திலும் கரிசனை கொள்ள தமிழ் அரசியல்வாதிகள்

ஒருமித்த கருத்தும், ஒருமித்த பயணமும் என்ற தொனிப்பொருளில் புதிய ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தமிழ் அரசியல் சூழ்நிலை தொடர்பான கருத்தரங்கு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.


வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வைத்து கூட்டமைப்பு உட்பட பல அரசியல் தலைமைகள் பதில்களின்றி தடுமாறும் வகையிலான கேள்விக்கணைகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கே.ரி.கணேசலிங்கம் தொடுத்திருந்தார்.


இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,


இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருக்கின்றார்கள் எனக்கு தெரிந்த வரையில். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாடு இந்த நிகழ்வு.
16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன்.


ஆனால் இங்கே இருப்பதோ இரண்டு பேர். ஆனால் சொல்லிக் கொள்வது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என.
சுமந்திரனும், மாவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக மட்டும் முடியாது.


நான் நினைக்கின்றேன் நாங்கள் 16 பேரை தேர்ந்தெடுத்தோம். ஏன் அவர்கள் இங்கு சமூகமாகவில்லை என வினவியுள்ளார்.

Related posts

இறக்குமதி செய்யப்பட்ட 3635 பசு மாடுகளை காணவில்லை! அதிகமான மோசடிகள் குற்றச்சாட்டு

wpengine

இஸ்ரேல் பரக்க உள்ள 29 பெண்கள்..!

Maash

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் இப்தார் நிகழ்வு

wpengine