பிரதான செய்திகள்

தமிழ் தொழிலாளர்களின் விட்டுப்பிரச்சினையினை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குருணாகல் நகர சுத்திகரிப்பு சேவைகளைச் செய்யும் வில்கொட சகோதர தமிழ் தொழிலாளர்களின் வீட்டுப்பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென
மாநகர சபை உருப்பினர்
அசார்தீன் மொய்னுதீன் தெரிவித்தார்.

பல தசாப்த்த காலமாக குருணாகல் நகரை சுத்தமயப்படுத்தும் ஊழியர்களின் சுமார் 118 குடும்பங்களின் வீடற்றப்பிரச்சினையை எமது காலத்தில் நிரந்தரமானதோர் தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்க வேண்டுமெனவும் கூறினார்.

குருணாகல் மா நகர சபையின் மூன்றாவது அமர்வில் ஐ.தே.க யின் உருப்பினர் செல்வநாயகி முத்தையா அவர்கள் கொண்டு வந்த பிரேரணைக்கமைய கருத்து தெரிவிக்கையிலையே அசார்தீன் அவர்கள் இக்கோரிக்கையை மாநகர முதல்வர் உட்பட அனைத்து உருப்பினர்களிடமும் முன்வைத்தார்.

மேலும் இத்தொழிலாளர்கள் எமது நகரின் இதயத்தைப் போன்றவர்கள். அவர்கள் சரியான அடிப்படை வசதிகளின்றி ஓர் குடிசையில் நான்கைந்து குடும்பங்கள் வாழுவதாகவும் சிறப்பான சூழல் காணப்படாமையே அவர்களின் வாழ்க்கை முன்னேற்றமடைவதை தடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வில்கொடை கிராமத்தில் அவர்களுக்கு வாழக்கூடிய வகையில் நிரந்தர வீட்டு வசதியை மாநர சபையாகிய நாம் முன்னின்று பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அசார்தீன் மொய்னுதீன் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

இதற்கான தீர்வை மிக விரைவில் பெற்றுக்கொடுப்போமென முதல்வர் துஷார சன்ஜீவ மற்றும் சு.க உருப்பினர் கிருஷ்ணபாலன் தியாகராஜா ஆகியோர் உறுதியளித்தனர்.

Related posts

பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் புதிய கட்டுப்பாடுகள்

wpengine

அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்த சவுதி

wpengine

புதிய நிதி அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுப்பு

wpengine