பிரதான செய்திகள்

தமிழ் கட்சிகள், பொது அமைப்புக்களின் முக்கிய கலந்துரையாடல் நாளை வவுனியாவில்!

தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வரலாற்று அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகளும், மத மற்றும் சிவில் அமைப்பினரும் தீர்மானித்திருந்தனர்.

இதற்கான முதலாவது கலந்துரையாடல் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்தது. இதன்போது மாவட்ட மட்டத்தில் குழுக்களை அமைத்து போராட்டங்களை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, முதலாவது கூட்டம் நாளை வவுனியாவில் காலை 10.30 மணியளவில் வாடிவீட்டு விருந்தினர் விடுதியில் 7 தமிழ் அரசியல் கட்சிகளும், பல்வேறு பொது அமைப்புக்களும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

Related posts

தேர்தல் காலத்தில் மாத்திரம் கோசமிடுகின்ற அரசியல்வாதிகளை நம்புகின்ற சமுகம்! அமைச்சர் றிஷாட்

wpengine

ஹோட்டலில் ஊழியரை தாக்கிய பாலித தெவரபெரும (விடியோ)

wpengine

கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது! முன்னணி

wpengine