பிரதான செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளால் மஸ்தான் எம்.பியிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைப்பு

(ஊடகப்பிரிவு)
பாதுகாப்பு தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பல வருடங்களாக அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளால் தன்னிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே. காதர் மஸ்தான் தெரிவித்தார்.

இன்று குறித்த சிறைச்சாலைக்கு கைதிகளின் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக சென்ற போதே இந்தக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2009ம் ஆண்டு காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழ் கைதிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்தது போன்று தம்மையும் விடுதலை செய்யுமாறும், அண்மையில் சில தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவித்தது போன்று தம்மையும் விடுதலை செய்ய உதவுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் நீதிமன்றத்திலுள்ள கைதிகளை அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதால் தமக்கு மொழி தொடர்பான பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் வட மாகாணத்திலுள்ள ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் தம்மை ஆஜர்படுத்துமாறும், தம்மை விரைவில் விடுவிக்க உதவி செய்யுமாறும் கைதிகள் வேண்டிக்கொண்டனர்.

குறித்த விடையம் தொடர்பில் வெகு விரைவில் ஜனாதிபதிய மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் பேசி சாதகமான பதிலொன்றை வழங்குவதாகவும் சிறைகளிலுள்ள கைதிகளின் குடும்பங்களுக்கு ஏதேனும் இடைக்கால நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் அவர் எமது செய்திப்பிரிவிற்கு மேலும்  தெரிவித்தார்.

Related posts

மஹிந்த அரநாயகவுக்கு விஜயம் (படம்)

wpengine

மஹிந்தவை பிடிக்கும் அமைச்சு ரணிலிடம்

wpengine

துருக்கி நாட்டில் ISIS தீவிரவாதிகளின் ஊடுருவல்

wpengine