செய்திகள்பிரதான செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பி. தான் கொலை, கொள்ளைகளை கற்றுக்கொடுத்தது .

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் கொலை, கொள்ளை கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியே கற்றுக் கொடுத்தது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். 

கண்டியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்மிக்க நிலையிலேயே காணப்படுகிறது. நாட்டில் கொலை, கொள்ளை கலாசாரத்தை ஜே.வி.பி. தான் முதன் முதலில் ஆரம்பித்தது. 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பி. தான் இவற்றை கற்றுக் கொடுத்தது. 

1984, 1985களில் ஜே.வி.பி.யிலிருந்து கொண்டு அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காதவர்கள் அந்தக் கட்சினராலேயே கொல்லப்பட்டனர்.

எனவே தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் துப்பாச்சூடுகள், வாள் வெட்டுக்களை கட்டுப்படுத்தக் கூடிய இயலுமையும், அனுபவமும் ஜே.வி.பி.க்கு காணப்படுகிறது.

தற்போதுள்ள அரசாங்கம் அதற்கு மிகப் பொறுத்தமானதாகும். எனவே இந்த கொலை, கொள்ளை கலாசாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசபந்து தென்னகோன் தலைமறைவாகுமளவுக்கு ஒன்றும் இடம்பெறவில்லை. அவர் தலைமறைவாகாமல் இருந்திருந்தால் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணையில் விடுதலையாகியிருக்கலாம். எவ்வாறிருப்பினும் அவர் ஓரிரு தினங்களில் வெளியே வருவார் என தெரிவித்தார். 

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

அரசியலமைப்பை விட்டு பொருளாதாரத்தை மட்டும் அரசாங்கம் கையாழ்தல், நாடு மேலும் பாதாளத்துக்குள்.

Maash

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு நிதி ஓதுக்கிடு -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

wpengine

நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்யலாம்.!

wpengine