செய்திகள்பிரதான செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள நாட்டுக்குள் வரவில்லை. : சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் அண்மையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் முட்டாளத்தனமான கருத்துக்கள் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் இருந்து அண்மையில் 323 கொள்கலன்கள் எந்தப் பரிசோதனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டன. அதில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருந்தன’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அண்மையில் தெரிவித்திருந்தார். அர்ச்சுனாவின் கருத்துக்களையே, தவறா னவை என்றும். முட்டாள்த்தனமானவை என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

பொன்சேகா மேலும் தெரிவித்ததாவது:- பைத்தியக்காரர் ஒருவர் வெளியிட்ட கருத்தாகவே அதனை நான் பார்க்கின்றேன் கொள்கலன்களில் என்ன இருந்தது என்பது எமக்குத் தெரியாது. அவை சோதனையின்றி விடுவிக்கப்பட்டதையும் அனுமதிக்க முடியாது. அவற்றில் புலிகளின் ஆயுதங்கள் இருந்தன என்று கனவு காணவும் முடியாது.

எதுவும் அறியாமல் தன்னைவீரனாக காண்பித்துக் கொள்வதற்காக அவ்வப்போது அர்ச்சுனா அறிவிப்புகளை வெளியிடுகின்றார். இப்படியான மனநிலையில் இருக்கும் ஒருவரின் கருத்து தொடர்பில் அவ்வளவு முக்கியத்துவம் வழங்கவேண்டியதில்லை- என்றார்.

Related posts

மன்னார் இ.போ.ச யின் பொறியியல் பிரிவின் அசமந்த போக்கு! மக்கள் அவதி

wpengine

சமூக வலைத்தளங்களில் Faceapp Challenge பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

wpengine

முன்னால் அமைச்சருக்கு செப்டெம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியல்

wpengine