பிரதான செய்திகள்

தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – இரா.சாணக்கியன்!

தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் நந்தவனம் முதியோர் இல்லத்தில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அனைவரும் நம்பிக்கையுடன் பயணிக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் ஆணைக்கு மாறாக செயற்படுவது சுரேஸ்

wpengine

அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்ற சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது!  

Editor

புத்தம் புதிய வசதியுடன் Samsung Galaxy Note 6

wpengine