பிரதான செய்திகள்

தன்னிச்சையாக செயற்படும் வவுனியா பிரதேச சபை

வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக பிரதேச சபை உறுப்பினர் து.தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தம் அவர் தெரிவிக்கையில்,

எமது சபையின் தவிசாளர் ச.தணிகாசலம் தனது வட்டாரத்தையும், அதை அண்டிய பகுதிகளையும் இலக்கு வைத்து தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து செயல்படுகின்றார்.

கனகராயன்குளம் பகுதியை மையப்படுத்தி சபை நிதியை பயன்படுத்தி அபிவிருத்திகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

கனகராயன் குளம் பகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு நிதி ஓதுக்கப்பட்ட நிலையில், அதற்கு மேலதிகமாக பேரூந்து தரிப்பிடம் அமைப்பதற்கு கடந்த மாத அமர்வில் தவிசாளர் பிரேரணை கொண்டு வந்த நிலையில் அது சபையில் தோற்கடிக்கப்பட்டது.

இந்த நிலையில், சபையின் திட்டமிடல் குழுவில் தோற்கடிக்கப்பட்ட பிரேரணையை கொண்டு வந்ததுடன், அடுத்த வருட வேலைதிட்டங்களில் முதலாவது வேலைத்திட்டமாக அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன், பிரதேச செயலகத்தால் 7 வீதிகள் திருத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த சேனைப்புலவு – மாமடு வீதியை நீக்கிவிட்டு அவரது காணி இருக்கின்ற புதூர் – புதுவிளாங்குளம் வீதியை திருத்த ஓன்றரை கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும், தவறுகளை தட்டி கேட்கும் போது அதற்கு அனுமதி வழங்காது சபை உறுப்பினர்களை அதட்டி இருத்துவதுடன், சபையில் தன்னிச்சையாக செயற்பட்டு வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பல கைத்தொழில் பேட்டைகளை அமைக்கும் நடவடிக்கையில்! பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine

எரிபொருக்காக 13 மோட்டார் சைக்கிள்களுக்கு பலத்த சேதம்

wpengine

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும்! அனைத்து விடயங்களும் பூர்த்தி

wpengine