பிரதான செய்திகள்

தந்தையின் இறுதி சடங்கு! பரீட்சைக்கு சென்ற சிறுமி! மனங்களை கனக்க வைக்கும் துயரம்

தரம் ஐந்தில் படிக்கும் மாணவி ஒருவரின் செயற்பாடு அனைவரின் மனங்களையும் கனக்க வைத்துள்ளது.

குறித்த மாணவி உயிரிழந்த தனது தந்தையின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் புலமை பரீட்சைக்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் சுரியவெவ, விஹாரகல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த மகளின் தந்தை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று பரீட்சைக்கு தயாரான மகள் முதலில் தாயாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார்.

பின்னர் தந்தையின் சடலத்திற்கு அருகில் சென்று வணங்கி பரீட்சை எழுத செல்கிறேன் அப்பா என கூறிவிட்டு கண்ணீருடன் மாணவி சென்றுள்ளார்.

மாணவியின் இந்த செயற்பாடு அங்கிருந்து அனைவருக்கும் வருத்ததை கொடுத்ததுடன், கண்ணீர் சிந்தவும் வைத்துள்ளது.

நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் குறித்த சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளார்.

நாடு பூராகவும் தரம் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி  கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  

wpengine

பணிப்புறக்கணிப்பை வாபஸ் பெற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்!

Editor

பொருளாதார நிலையம் கூட்டமைப்புக்குள் முரண்பாடு

wpengine