பிரதான செய்திகள்

தண்ணீருக்கு பதில் காற்று, நீர் அமைச்சரின் புது வகை ஊழல்

புத்தளத்தின் புற நகர் பகுதிகளில் நீர் வழங்கல் வடிகாலமைப்புக்குச் சொந்தமான குடி நீர் குழாய்களில் நீருக்கு பதிலாக வெறும் காற்று வருவதையிட்டு அப்பகு மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களாக மேற்படி பிரதேசங்களில் இவ்வாறான தண்ணீருக்கு பதிலாக காற்றை அனுப்பும் மோசமான நிலை நீடிப்பதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பயனும் கிட்டவில்லை எனவும் அப்பகுதி மக்கள் விசனம்  தெரிவிக்கின்றனர்.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் முன்று தடவைக்கு மேலாக நீர் கட்டணங்களை அதிகரித்துள்ள போதும் கட்டணங்களுக்குறிய சேவை வழங்காமல் எம்மைப்போன்ற வறியவர்களின் அன்றாட வாழ்க்கையை சோதிக்காமல் இப்படியான ஊழல் நடவடிக்கைகளை கை விடுமாறும் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

தங்களது அன்றாட வாழ்க்கையை மிகவும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமை அரசை விட்டு துரத்தியடிக்குமாறு அப்பகுதி மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காலியில் சுவரில் நடக்கும் அபூர்வ திறமை படைத்த சிறுமி

wpengine

பண்டைய காலந்தொட்டு உலக சமுதாயம் பலவற்றாலும் கொண்டாடப்பட்ட ஒரு விழா -மஹிந்த

wpengine

மக்களின் உதவியுடன் அரசாங்கத்தை மிக விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம்.

wpengine