பிரதான செய்திகள்

தடை செய்து! வெங்காயத்திற்கு ஊக்கமளிக்கும் அமைச்சர் றிஷாட்

வெங்காய இறக்குமதியைத் தடைசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

 

மன்னாரின் மாந்தையில் வெங்காயத் தொழிற்சாலைக்கு விஜயம் செய்து ஆய்வு நடத்திய பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இலங்கையில் ஆனையிறவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வெங்காய உற்பத்தித் துறை இயங்கியபோதும், சில தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் அவை முற்றாகச் செயலிழந்து போயுள்ளன. அவற்றை மீள இயக்குவதற்கு ஊக்கமளிக்கும் வகையிலேயே வெங்காய இறக்குமதியைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு மட்டுமே வெங்காய இறக்குமதிக்குத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

முன்னால் ஜனாதிபதி முர்ஷிக்கு மரண தண்டனை இரத்து

wpengine

புத்தளம் நுரைச்சோலையில் ஒருவர் படுகொலை – சந்தேக நபர் தலைமறைவு!

Editor

கம்மன்பிலவுக்கு முஜிப் சவால்! இனவாதத்திற்கு பணம் கொடுத்தவர் மஹிந்த

wpengine