பிரதான செய்திகள்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,339 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் 1,330 அமெரிக்க டொலராக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,339 அமெரிக்க டொலராகியுள்ளது. ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை இன்று திடீரென உயர்வடைந்துள்ளது.
உலகளவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் உறுதியற்ற தன்மையே இந்த திடீர் விலை உயர்வுக்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வட கொரியாவின் அணு ஆயுத பிரச்சினை உள்ளிட்ட சில விடயங்கள் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்திருந்தது.
உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்வார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுண். இது 24 கரட் சொக்கத் தங்கம் ஆகும்.

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்.

தங்கம் அவுன்ஸ் – 203,998 ரூபாய்
24 கரட் 1 கிராம் தங்கம் – 7,200 ரூபாய்
24 கரட் 8 கிராம் தங்கம் (1 Pawn) – 57,600 ரூபாய்
22 கரட் 1 கிராம் தங்கம் – 6,600 ரூபாய்
22 கரட் 8 கிராம் தங்கம் (1 Pawn) – 52,800 ரூபாய்
21 கரட் 1 கிராம் தங்கம் – 6,300 ரூபாய்
21 கரட் 8 கிராம் தங்கம் (1 Pawn) – 50,400 ரூபாய்

Related posts

அல்-காசிமியில் ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழா (படங்கள்)

wpengine

துருக்கியில் இராணுவப் புரட்சி ; குறைந்தது 42 பேர் பலி (படங்கள்)

wpengine

கல்வி சமூகத்தினை மென்மேலும் உயர்த்த வேண்டும் அடைக்கலம் பா.உ

wpengine