பிரதான செய்திகள்

தகவல்களை வழங்குவதில் பின்னடிக்கும் பிரதேச செயலகம்

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவதில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் பின்னடிப்பதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த பிரதேச செயலகத்தின் தகவல் வழங்கும் உத்தியோகத்தரிடம் தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவைக்கான தகவல்களை வழங்குவதில் பின்னடிப்பதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த விண்ணப்ப படிவங்கள் தபால் மூலம் அனுப்பப்படுகின்ற போதிலும், குறித்த விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துவதும் இல்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே பொது மக்களாலும், ஊடகவியலாளர்களாலும் வழங்கப்பட்டுள்ள தகவல்களை அறியும் உரிமைச்சட்ட விண்ணப்ப படிவங்களிற்கான தகவல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

குறித்த பிரதேச செயலகத்திற்கு நிரந்தரமான பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்படாமையால் மக்கள் தமது கருமங்களை நிறைவேற்றுவதிலும், தகவல்களை பெற்றுக்கொள்வதிலும் பெரும் சிரமங்களை தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆராய்ந்து, பொதுமக்கள் நலனிற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

படையினரிடம் உள்ள நிலங்களை விடுவிக்க கோரி மன்னாரில் கண்டனப் பேரணி

wpengine

இரவு நேரத்தில் மரிச்சுக்கட்டி மக்களை பார்வையிட வந்த இஷ்ஹாக் (பா.உ) படம்

wpengine

காணாமல் போனோர் தொடர்பில் டக்ளஸ் ஜனாதிபதியிடம் கோரிக்கை

wpengine