பிரதான செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் தந்திரோபாய திட்டமாக இலங்கை

தென் ஆசியாவிற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தந்திரோபாய திட்டத்தின் முக்கிய பங்குதாரராக இலங்கை திகழ்கின்றது என அமெரிக்க பதில் துணை ராஜாங்கச் செயலாளர் அலிஸ் வேல்ஸ்  ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

மேலும் இது குறித்து அலிஸ் வேல்ஸ் குறிப்பிடுகையில்,

“ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஆட்சி வரவேற்கத்தக்கதாக உள்ளது.

மேலும் ஜனநாயக மறுசீரமைப்புக்கள், நல்லிணக்க முனைப்புக்கள் போன்றன பாராட்டுக்குரியவை.

இதனால் அனைத்த வழிகளிலும் இயன்றளவு உதவிகளை இலங்கைக்கு வழங்க அமெரிக்கா விரும்புகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

முள்ளிக்குளத்தில் 100 ஏக்கர் காணியை விடுவிக்க இணக்கம்

wpengine

மாந்தை மேற்கு பிரதேச பிரிவில் மூன்று கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தெரிவு.

Maash

மஸ்தான் அவர்களின் முயற்சியில் மன்னார், முல்லைத்தீவில் 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு.

wpengine